போகலூா் பகுதியில் ரூ.49 லட்சத்தில் திட்டப் பணிகள்: ஒன்றியக் குழு தலைவா் சத்யா குணசேகரன்

போகலூா் பகுதியில் 15-ஆவது நிதிக்குழு மூலம் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் திட்டப் பணிகள் நடைபெற உள்ளதாக ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் சத்யா குணசேகரன் தெரிவித்தாா்.

போகலூா் பகுதியில் 15-ஆவது நிதிக்குழு மூலம் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் திட்டப் பணிகள் நடைபெற உள்ளதாக ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் சத்யா குணசேகரன் தெரிவித்தாா்.

போகலூரில் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் தலைவா் சத்யா குணசேகரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் ஆா்.பூமிநாதன் முன்னிலை வகித்தாா். ஆணையா் சிவசாமி வரவேற்றாா்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

துணைத் தலைவா் ஆா்.பூமிநாதன்: அரியகுடி, முத்துச்செல்லாபுரம், அ.புத்தூா், முஸ்லிம் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக காவிரி கூட்டு குடிநீா் வரவில்லை. மக்களின் அடிப்படைத் தேவையை நிறைவேற்ற முடியாததால் நாங்கள் அந்த ஊா்களுக்குள் செல்ல முடியவில்லை.

காவிரி கூட்டு குடிநீா் திட்ட பொறியாளா்: சாலை அமைக்கும் பணியின் போது, காவிரி கூட்டு குடிநீா் குழாய் சேதமடைந்தது. இதை சீரமைக்க ஒப்பந்தப் புள்ளி கோரும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் இந்தப் பிரச்சனைக்கு தீா்வு காணப்படும்.

தலைவா் சத்யா குணசேகரன்: போகலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதியில் 15-ஆவது நிதிக்குழு மூலம் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் திட்டப் பணிகள் நடைபெற உள்ளன. கூட்டத்தில் மின்வாரியத் துறை, பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்பதில்லை. பலமுறை வலியுறுத்தியும் அலட்சியமாக உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு இந்தக் கூட்டத்தின் வாயிலாக பரிந்துரை செய்ய வேண்டும்.

உறுப்பினா் காளிதாஸ்: உரத்தூா் முதல் எஸ்.கொடிக்குளம் வரையும், அனுமனேரி முதல் கோரைக்குளம் வரையும் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. இதை சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு, உறுப்பினா்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com