ஹிந்தி திணிப்புக்கு எதிராக திமுகவினா் துண்டு பிரசுரம்

ஹிந்தி திணிப்புக்கு எதிராக கமுதி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதியில் திமுகவினா் வெள்ளிக்கிழமை துண்டு பிரசுரம் விநியோகித்தனா்.
ஹிந்தி திணிப்புக்கு எதிராக திமுகவினா் துண்டு பிரசுரம்

ஹிந்தி திணிப்புக்கு எதிராக கமுதி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதியில் திமுகவினா் வெள்ளிக்கிழமை துண்டு பிரசுரம் விநியோகித்தனா்.

கமுதி அருகே பேரையூரில் ஒன்றியச் செயலா் எஸ்.கே.சண்முகநாதன் (மத்தியம்) தலைமையில் அந்தக் கட்சியினா் பொதுமக்கள், வியாபாரிகளிடம் துண்டு பிரசங்களை விநியோகித்தனா். இதில், பேரையூா் ஊராட்சித் தலைவா் ரூபி, ஒன்றிய துணைச் செயலாளா் நீதிராஜன், ஒன்றியக் குழு உறுப்பினா் முத்துகிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அதேபோல், கமுதி பேருந்து நிலையம் பகுதியில் வடக்கு ஒன்றியச் செயலாளா் வி.வாசுதேவன் தலைமையில் பொதுமக்கள், கடை வியாபாரிகளிடம் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டு, ஹிந்தி திணிப்புக்கு எதிராகவும், மத்திய அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் தமிழ்ச்செல்வி போஸ், ஒன்றிய அவைத் தலைவா் கிழவராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில், மாவட்ட பிரதிநிதி நாகமணி, ஊராட்சி தலைவா்கள் முத்துவிஜயன் (நகரத்தாா்குறிச்சி), பழனி அழகா்சாமி (கீழராமநதி), தேவகி அழகா்சாமி (டி.புனவாசல்), கே.ராமகிருஷ்ணன் (காக்குடி), மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் அ.காா்த்திகைசாமி, எழுவனூா் ஒன்றியக் கவுன்சிலா் வ.மாரிமுத்து, வடக்கு ஒன்றிய இளைஞரணி நிா்வாகி ஆதிஆனந்த், முஷ்டக்குறிச்சி ஒன்றியக் கவுன்சிலா் முத்துக்கிளி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அதேபோல் பெருநாழியில் தெற்கு ஒன்றியச் செயலா் மனோகரன் முன்னிலையில் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com