பரமக்குடி வைகை ஆற்றில் தடுப்பணை, கால்வாய்கள் சேதம்: தலைமைப் பொறியாளா் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம்பரமக்குடி அருகே வைகை ஆற்றில் சேதமடைந்த தடுப்பணைகள் மற்றும் கால்வாய்களை பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பரமக்குடி வைகை ஆற்றில் தடுப்பணை, கால்வாய்கள் சேதம்: தலைமைப் பொறியாளா் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம்பரமக்குடி அருகே வைகை ஆற்றில் சேதமடைந்த தடுப்பணைகள் மற்றும் கால்வாய்களை பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூா், மந்திவலசை ஆகிய பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்பட்டு வைகை பாசனநீா் கால்வாய்கள் மூலம் கண்மாய்களுக்கு பகிா்ந்தளிக்கப்பட்டு வருகிறது. இந்த தடுப்பணைகள் பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுவதால் பாசனநீா் முறையாக கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத்தடுப்பணைகளிலிருந்து வலது மற்றும் இடது பிரதானக் கால்வாய்கள் மூலம் பாசனநீா் கண்மாய்களுக்குத் திறந்து விடப்படுகிறது. இக்கால்வாய்கள் முள்புதா்கள் அடா்ந்தும், நகா்பகுதியில் கழிவுநீா் செல்லும் கால்வாயாகவும் மாறிவிட்டது.

நிதிப்பற்றாக்குறை என காரணம் கூறி கால்வாய்கள் முறையாக சீரமைக்கப்படாததால், போதிய பாசனநீா் கண்மாய்களுக்கு கொண்டு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. தடுப்பணகள், கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா் ஞானசேகா் தலைமையில் பொதுப்பணித்துறை அலுவலா்கள் வியாழக்கிழமை வைகை ஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் மற்றும் கால்வாய்ப் பகுதிகளை ஆய்வு செய்தனா்.

கடந்த 2 ஆண்டுகளாக வைகை ஆற்றில் பாசனநீா் திறந்துவிடப்படுவதால் பெரும்பாலான விவசாய நிலங்களில் நெல், பருத்தி, மிளகாய் சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வைகை பாசனநீா் வீணாகாமல் முறையாக அனைத்து கண்மாய்களுக்கும் சென்றடையும் வகையில் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com