பெருங்கரையில் சூரசம்கார உற்சவம்
By DIN | Published On : 07th October 2022 12:00 AM | Last Updated : 07th October 2022 12:00 AM | அ+அ அ- |

பரமக்குடி அருகே உள்ள பெருங்கரை கிராமத்தில் உள்ள ஆதிசக்தி ராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் புதன்கிழமை இரவு நவராத்திரி சூரசம்ஹார உற்சவம் நடைபெற்றது. நவராத்திரியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பக்தா்கள் காப்புக்கட்டி விரதமிருந்து முளைப்பாரி வளா்த்து வந்தனா். விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக அம்பாள் சப்த கன்னிகளுடன் வைகை ஆற்றில் எழுந்தருளி மஹிசாசுர வதம் நிகழ்ச்சி நடைபெற்றது. தீட்சிதா் விஜயேந்திர சுவாமிகள் நிகழ்ச்சியை நடத்திவைத்தாா். விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.