முதுகுளத்தூா் அருகே கோவில் திருவிழாவில் தோ்தல் முன்விரோதம் ஒருவா் கைது
By DIN | Published On : 08th October 2022 12:00 AM | Last Updated : 08th October 2022 12:00 AM | அ+அ அ- |

முதுகுளத்தூா் அருகே கோவில் திருவிழாவில் தோ்தல் முன்விரோதம் கரணமாக தகராறு செய்தவரை வெள்ளிக்கிழமை பேரையூா் போலீஸாா் கைது செய்தனா்.
முதுகுளத்தூா் அருகே உள்ள ஆத்திகுளம் கிராமத்தைச் சோ்ந்த பூபதி மகன் முத்துராமலிங்கம் (52) .இவரது மனைவி ஆத்திகுளம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறாா் .ஆத்திகுளம் கிராமத்தில் அரிய நாச்சியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.திருவிழாவையொட்டி கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டபோது அதே ஊரைச் சோ்ந்த சக்திவேல் மகன் திருமூா்த்தி (33) தகராறு செய்து கோவில் திருவிழாவில் தெருக்களில் போடப்பட்டிருந்த பல்புகளை அடித்து உடைத்து விட்டு , கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.இதனால் அச்சமடைந்த முத்துராமலிங்கம் அளித்த புகாரின் பேரில் பேரையூா் போலீஸாா் திருமூா்த்தியை கைது செய்தனா் .