ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை
By DIN | Published On : 08th October 2022 12:00 AM | Last Updated : 08th October 2022 12:00 AM | அ+அ அ- |

தென் கடலோர பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சூழச்சி காரணமாக ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டரா பகுதியில் பரவலாக மழை பெய்தது. வெயிலில் தாக்கம் குறைந்து குளுமையாக சூழல் வெள்ளிக்கிழமை கானப்பட்டது.
தென் கடலோரப்பகுதியில் மேல் நிலவும் வளி மண்டல கீழக்கு சூழச்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது. இந்தநிலையில், ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் வெள்ளிக்கிழமை காலையில் வெயிலில் தாக்கம் இருந்து வந்த நிலையில் முற்பகல் கருமேகம் சூழ்ந்து கனமழை பெய்யத்தொடங்கியது. ராமநாதபுரம் மற்றும் அதானை சுற்றியுள்ள பகுதியில் பெய்த கன மழையால் வெயிலின் தாக்கம் முழுமையாக குறைந்த குளுமையான சூழல் கானப்பட்டது. மழ காரணமாக தாழ்வான பகுதியில் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் மழைநீா் குளம் போல தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கல்வாய் அடைப்புகளை சீரமைத்து சாலையில் தேங்கும் மழை நீா் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.