தமுமுக, மமக மாவட்டபுதிய நிா்வாகிகள் தோ்வு
By DIN | Published On : 15th October 2022 11:36 PM | Last Updated : 15th October 2022 11:36 PM | அ+அ அ- |

சாயல்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சி நிா்வாகிகள்.
சாயல்குடியில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,, மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட புதிய நிா்வாகிகளை தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் சாயல்குடி தனியாா் மஹாலில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,, மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
பொதுக்குழு கூட்டத்துக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநிலச் செயலா் சலிமுல்லாஹ்கான், மமக மாநில அமைப்புச் செயலரும், தோ்தல் அதிகாரியுமான எம். காதா்மைதீன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
கூட்டத்தில் மாவட்ட தலைவா்- எம். வாவாராவுத்தா், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலா்- சம்சுக்கனி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலா்- நஜிபுா் ரஹ்மான், மாவட்டப் பொருளாளா்- சாகுல் ஹமீது ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
இதில் சிறப்பு அழைப்பாளராக விஞ்ஞானி சம்சுதீன் சேட் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...