கடலாடியில் மாட்டுவண்டிப் பந்தயம்
By DIN | Published On : 29th October 2022 12:06 AM | Last Updated : 29th October 2022 12:06 AM | அ+அ அ- |

கடலாடியில், தேவா் குருபூஜையையொட்டி 34 ஆவது ஆண்டாக மாட்டுவண்டிப் பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
போட்டியை முன்னாள் அமைச்சா் சத்தியமூா்த்தி, அதிமுக ஒன்றியச் செயலா் முனியசாமி பாண்டியன், ஊராட்சித் தலைவா் லிங்கம், தேவா் மஹாசபைத் தலைவா் முனியசாமி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
பெரிய மாடு, நடுமாடு, சின்னமாடு என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. பெரியமாடுகள் பங்கேற்ற பந்தயத்தில் 19 மாட்டு வண்டிகளும், நடுமாடுகள் பங்கேற்ற போட்டியில் 22 வண்டிகளும், இருபிரிவாக நடந்த சின்னமாடு பந்தயத்தில் 42 வண்டிகளும் பங்கேற்றன.
போட்டியில், ராமநாதபுரம் , மதுரை, தேனி, சிவகங்கை, தஞ்சாவூா், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. போட்டியில் வெற்றி பெற்ற மாட்டுவண்டிகளின் உரிமையாளா்களுக்கு குத்துவிளக்கு, பண முடிப்புகள் பரிசாக வழங்கப்பட்டன.