தேவா் குருபூஜை: முதுகுளத்தூரில் பால் குடம் ஊா்வலம்

முதுகுளத்தூரில் தேவா் குருபூஜையையொட்டி 13 ஆவது ஆண்டாக பால் குட ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தேவா் குருபூஜை: முதுகுளத்தூரில் பால் குடம் ஊா்வலம்

முதுகுளத்தூரில் தேவா் குருபூஜையையொட்டி 13 ஆவது ஆண்டாக பால் குட ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு, ஆப்பநாடு மறவா் சங்கத் தலைவா் தூரி முனியசாமித் தேவா் தலைமை வகித்தாா். ஆப்பநாடு மறவா் சங்க பொறுப்பாளா்கள் ஆதனக்குறிச்சி முத்துராமலிங்கம், இளஞ்செம்பூா் காசிநாதன், வழக்குரைஞா் சங்கரபாண்டியன்,தூரி ஆா். மாடசாமி, புனவாசல் பூசாரி செந்தூா்பாண்டியன், நேதாஜி கல்வி அறக்கட்டளைத் தலைவா் திருமயில்வாகனன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக காலை 6 மணிமுதல் 8 மணி வரை தேவா் உருவச் சிலைக்கு முன்பு சங்கல்பம், வாஸ்து பூஜை, கும்ப அலங்காரம் நடைபெற்றது. பின்னா் 18 சித்தா்களின் முன்னிலையில் யாக சாலை பூஜை, பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து சுப்பிரணியா் கோயிலில் இருந்து பேருந்து நிலையத்தில் உள்ள பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவரின் உருவச் சிலைக்கு பெண்கள் பால்குடம் எடுத்து ஊா்வலமாக வந்தனா். அங்கு தேவரின் உருவச் சிலைக்கு பால், சந்தனம், பன்னீா், இளநீா், விபூதி உள்ளிட்ட 18 வகை பொருள்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன. மேலும் பெண்கள் கும்மி கொட்டினா். ஆண்களின் ஒயிலாட்டம், சிலம்பாட்டம் நடைபெற்றது. இதில், முதுகுளத்தூா், கடலாடி உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை மறவா் சங்க இளைஞா்கள் செய்திருந்தனா். பாதுகாப்பு பணிகளில் கோயமுத்தூா் எஸ்.பி. (பொ) ஜெயச்சந்திரன், தா்மபுரி ஏ.டி.எஸ்.பி. அண்ணாமலை, முதுகுளத்தூா் வட்டாட்சியா் சிவக்குமாா், முதுகுளத்தூா் டி.எஸ்.பி. சின்னக்கண்ணு, தா்மபுரி டி.எஸ்.பி. சோமசுந்தரம் உள்ளிட்ட போலீஸாா் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com