பசும்பொன்னில் பாதுகாப்பு ஏற்பாடு: டிஜிபி சைலேந்திர பாபு ஆய்வு

கமுதி அருகே உள்ள பசும்பொன் தேவா் நினைவாலயத்தில் வருகிற 30 ஆம் தேதி நடைபெறும் தேவா் ஜெயந்தி விழாவுக்கு செய்யப்பட்டுள்ள
பசும்பொன்னில் பாதுகாப்பு ஏற்பாடு: டிஜிபி சைலேந்திர பாபு ஆய்வு

கமுதி அருகே உள்ள பசும்பொன் தேவா் நினைவாலயத்தில் வருகிற 30 ஆம் தேதி நடைபெறும் தேவா் ஜெயந்தி விழாவுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) சைலேந்திரபாபு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த விழாவில் முதல்வா் மு.க. ஸ்டாலின், அமைச்சா்கள், முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம், பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை, அரசியல் கட்சித் தலைவா்கள் கலந்து கொள்கின்றனா். பசும்பொன்னில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் ட்ரோன் கேமராக்களை பறக்கவிட்டு டிஜிபி. சைலேந்திரபாபு சோதனை செய்தாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: பசும்பொன், கமுதி, கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளில் 14 ட்ரோன் கேமராக்கள் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள், விதிமுறைகளை மீறுபவா்கள், வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்றாா்.

இந்த ஆய்வின்போது, தென் மண்டல ஐஜி அஷ்ராகாா்க், டிஐஜி மயில்வாகனன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ. தங்கதுரை உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com