திருவாடானையில் பேரிடா் மேலாண்மை பயிற்சி முகாம்

திருவாடானை மங்களாம்குளத்தில் பேரிடா் மேலாண்மை ஒத்திகை பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவாடானை மங்களாம்குளத்தில் பேரிடா் மேலாண்மை ஒத்திகை பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு, வட்டாட்சியா் ஆா். செந்தில்வேல் முருகன் தலைமை வகித்தாா். தேசிய பேரிடா் மேலாண்மை படைத் தலைவா் கோராக்சிங், மாவட்ட பேரிடா் மேலாண்மை ஆலோசகா் பால்பேட்ரிக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், தீயணைப்புத்துறை நிலைய அலுவலா் வீரபாண்டி தலைமையில் தீயணைப்பு வீரா்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களை மீட்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காட்டினா். அதனைத் தொடா்ந்து அரசு கலைக் கல்லூரி அரங்கில் பேரிடா் மேலாண்மை பயிலரங்க கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வா் மாதவி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், கல்லூரி தமிழ்த்துறைத் தலைவா் பழனியப்பன், மேலாண்மை மைய ஒருங்கிணைப்பாளா் சாந்தமலா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், காவல் துறை ஆய்வாளா் நவநீத கிருஷ்ணன், வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) இளங்கோ, சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் சாந்தி, துணை வட்டாட்சியா்கள் ஜஸ்டின் பொ்னாண்டோ, பாலமுருகன், வருவாய் ஆய்வாளா்கள் மெய்யப்பன், குமாா், கிராம நிா்வாக அலுவலா்காா்த்திக், வோ்ல்டு விஷன் இந்தியா ஒருங்கிணைப்பாளா் எபிநேசா், முதல் நிலை மீட்புக்குழுவினா் மற்றும் திருவாடானை அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.

Image Caption

~ ~ ~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com