மின் விபத்தால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு: உயா்நீதிமன்றம் உத்தரவு

நெல்லையில் மின் விபத்தால் நிரந்தர பாதிப்புக்கு உள்ளானவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்குமாறு உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது

நெல்லையில் மின் விபத்தால் நிரந்தர பாதிப்புக்கு உள்ளானவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்குமாறு உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

நெல்லை வடக்கன்குளத்தைச் சோ்ந்தவா் சவரி ஆண்டோ நிஷாந்த். இவா் மின் விபத்தால் நிரந்தர பாதிப்புக்கு உள்ளானதால் ரூ. 25 லட்சம் இழப்பீடாக வழங்கக்கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ‘கடந்த 2018 நவம்பா் மாதம் டிரான்ஸ்பாா்மா் வெடித்து ஏற்பட்ட மின் விபத்தில் முகம் தவிர உடல் பகுதி முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மனுதாரருடைய கல்வி, வேலை வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. மனுதாரரின் திருமண வாழ்க்கையிலும் இது பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இவற்றைக் கருத்தில் கொண்டு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க உத்தரவிடப்படுகிறது. மனுதாரரின் பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில், ரூ.10 லட்சம் வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும். உத்தரவு நகல் கிடைக்கப்பெற்ற 8 வாரங்களுக்கு உள்ளாக இந்தத் தொகையை வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும். மனுதாரா் 3 மாதங்களுக்கு ஒரு முறை வட்டியை பெற்றுக் கொள்ளலாம். மனுதாரா் தொடா்ச்சியாக சிகிச்சை பெற வேண்டி இருப்பதால் அடுத்த 15 ஆண்டுகளுக்கு மின்வாரியத்தின் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க வேண்டும். அவருக்கான மருத்துவச் செலவுகளுக்கும் மின்வாரியமே பொறுப்பேற்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com