ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்றும், நாளையும் டாஸ்மாக் கடைகள் அடைப்பு

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (செப்.10, 11) டாஸ்மாக் கடைகளை அடைக்க ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் உத்தரவிட்டுள்ளாா்.

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (செப்.10, 11) டாஸ்மாக் கடைகளை அடைக்க ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் உத்தரவிட்டுள்ளாா்.

இமானுவேல் சேகரன் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை (செப்.11) கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு மாவட்ட

ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பரமக்குடிக்கு மரியாதை செலுத்த வருவோருக்கு குடிநீா் உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசுப் போக்குவரத்து துறை மூலம் பரமக்குடிக்கு ஞாயிற்றுக்கிழமை கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். அஞ்சலி செலுத்த அனுமதிபெற்றவா்கள் சாலை வழிகளிலேயே வந்து செல்ல வேண்டும்.

மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (செப்.10, 11) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலா்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவா் என்றாா்.

முன்னதாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) கே.ஜே.பிரவீன் குமாா், காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ம.காமாட்சி கணேசன், பரமக்குடி வருவாய் கோட்டாசியா் முருகன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சேக் மன்சூா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com