மதுபாட்டில்கள் விற்பனை செய்த இளைஞா் கைது
By DIN | Published On : 17th September 2022 11:06 PM | Last Updated : 17th September 2022 11:06 PM | அ+அ அ- |

மண்டபத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து 150 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் காவல்
சாா்பு-ஆய்வாளா் கோட்டைச்சாமி வளையா் தெருவில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாா். அப்போது முனியசாமி(35) என்பவரைப் பிடித்து சோதனையிட்டபோது விற்பனைக்காக 150 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், முனியசாமியை கைது செய்தனா்.