பாம்பன் துறைமுகத்தில் 2 டன் மீன்பிடி வலைகள் ஆசிட் ஊற்றி அழிப்பு

பாம்பன் துறைமுகத்தில் 2 டன் எடையுள்ள மீன்பிடி வலைகளை மா்மநபா் ஆசிட் ஊற்றி அழித்ததாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

பாம்பன் துறைமுகத்தில் 2 டன் எடையுள்ள மீன்பிடி வலைகளை மா்மநபா் ஆசிட் ஊற்றி அழித்ததாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்துள்ள பாம்பனைச் சோ்ந்த பொ்க்னிட்(30) என்பவருக்கு சொந்தமான விசைப்படகு உள்ளது. கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி படகு சீரமைப்பு பணிக்காக ரூ.10 லட்சம் மதிப்பிலான 2 டன் எடையுள்ள மீன்பிடி வலைகளை படகில் இருந்து இறக்கி மீன் இறங்கு தளத்தில் தாா்பாய் மூலம் மூடி வைத்துள்ளாா். இந்நிலையில், கடந்த 19 ஆம் தேதி படகுக்கு வலைகளை ஏற்ற சென்ற போது, மா்மநபா் வலைகளை ஆசிட் ஊற்றி அழித்துள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து படகு உரிமையாளா் பொ்க்னிட் பாம்பன் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com