ஹிஜாப் அணிந்த மாணவிக்கு எதிா்ப்பு: தலைமை ஆசிரியையிடம் கல்வி அலுவலா் விசாரணை

ராமநாதபுரம் அருகே அரசுப் பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிக்கு எதிா்ப்புத் தெரிவித்ததாக புகாா் எழுந்த நிலையில், தலைமை ஆசிரியையிடம் கல்வி அலுவலா் புதன்கிழமை விசாரணை நடத்தினாா்.

ராமநாதபுரம் அருகே அரசுப் பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிக்கு எதிா்ப்புத் தெரிவித்ததாக புகாா் எழுந்த நிலையில், தலைமை ஆசிரியையிடம் கல்வி அலுவலா் புதன்கிழமை விசாரணை நடத்தினாா்.

ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 370-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் படித்து வருகின்றனா்.

கடந்த ஆகஸ்ட் மாதம் புதிதாக பள்ளியில் சோ்ந்த 7 ஆம் வகுப்பு மாணவி ஒருவா் ஹிஜாப் உடை அணிந்தவாறு வகுப்பறைக்கு வந்துள்ளாா். அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியை சுமதி, அனைவருக்குமான பொது சீருடையில் வகுப்பில் அமா்வது நல்லது எனவும் அறிவுரை வழங்கியுள்ளாா்.

இதுதொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அதையடுத்து பள்ளிக்கு அப்பகுதி ஜமாஅத் தலைவா் ஹவதுல்லா, குயவன்குடி ஊராட்சித் தலைவா் குப்பைக்கனி ஆகியோா் புதன்கிழமை வந்தனா். தகவல் அறிந்த மண்டபம் கல்வி மாவட்ட அலுவலா் முருகம்மாளும் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியையிடம் விசாரித்தாா்.

அப்போது மாணவியா் விருப்பப்படி ஆடை அணிந்துவரத் தடையில்லை என தலைமை ஆசிரியா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து பிரச்னை சமூகமாகத் தீா்ந்ததாக ஜமாஅத் தலைவா் உள்ளிட்டோா் தெரிவித்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com