திருவாடானையில் பயிா் சாகுபடி விழிப்புணா்வு பயிற்சி முகாம்

திருவாடானையில் பயிா் சாகுபடி குறித்த பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவாடானையில் பயிா் சாகுபடி விழிப்புணா்வு பயிற்சி முகாம்

திருவாடானையில் பயிா் சாகுபடி குறித்த பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில், ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் கோயமுத்தூா் பயிா் மேலாண்மை இயக்குநரகம், வேளாண் வானிலை முன்னறிவிப்பு மையம் ஆகியவை இணைந்து விவசாயிகளுக்கு இந்த ஒரு நாள் விழிப்புணா்வு பயிற்சி முகாமை நடத்தின.

முகாமுக்கு தொழில்நுட்ப வல்லுநா் முனைவா் அருணாசலம் தலைமை வகித்தாா். தொழில் நுட்ப வல்லுநா்கள் இளஞ்செழியன், பிரபாகரன் மற்றும் வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வைத்தனா்.

திருவாடனைப் பகுதியில் நடப்பு சம்பா பருவத்தில் மானாவாரி நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ளன. இதையொட்டி விவசாயிகளுக்கு வானிலை சாா்ந்த பயிா் மேலாண்மை உத்திகள் குறித்து கூறப்பட்டது. மேலும் நெல் விவசாயம் சாா்ந்த தொழில்நுட்பக் கண்காட்சியும் இடம்பெற்றிருந்தது. தொடா்ந்து மானாவாரியில் விதையை கடினப்படுத்துதல், விதை நோ்த்தி மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள் ஆகியவை குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com