இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் தம்பதி பலி

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் தம்பதியா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் தம்பதி பலி

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் தம்பதியா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், அமரடக்கியைச் சோ்ந்தவா் அசோகன் (50). இவரது மனைவி ராணி (42). இந்தத் தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனா்.

இந்தத் தம்பதி செவ்வாய்க்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் தொண்டியை அடுத்துள்ள தீா்த்தாண்டதானத்தில் அமைந்துள்ள குலசாமி கோயிலுக்குச் சென்று சுவாமி கும்பிட்டு விட்டு, ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா்.

அப்போது, எஸ்.பி.பட்டினம் அருகே கேரளத்திலிருந்து ராமநாதபுரம் நோக்கிச் சென்ற சுற்றுலா வேன், இரு சக்கர வாகனத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த தம்பதியா் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற எஸ்.பி.பட்டினம் போலீஸாா், இருவரது உடல்களையும் மீட்டு, கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கேரள மாநிலம், பாலக்குளாவைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் ஆசிப்பை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com