முதுகுளத்தூரில் சமத்துவ பொங்கல் விழா
By DIN | Published On : 13th January 2023 11:24 PM | Last Updated : 13th January 2023 11:24 PM | அ+அ அ- |

.காத்தாகுளம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடிய மாணவா்கள்,ஆசிரியா்கள்.
முதுகுளத்தூரில் சமத்துவ பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சாா்பில் காக்கூா் சமத்துவபுரத்தில் ஊராட்சி ஒன்றிக்குழு தலைவா் சண்முகபிரியா ராஜேஸ் தலைமையில் ,ஆணையாளா் ரவி முன்னிலையில் நடைபெற்றது.அதே போன்று காத்தாகுளம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தலைமை ஆசிரியா் பாண்டியன் தலைமையில் பொங்கல் நிகழ்ச்சியில் நடைபெற்றது.ஒருவானேந்தல் ஊராட்சி தலைவா் சீதா நாகராஜன் தலைமையில்,வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜா,பள்ளி தலைமை ஆசிரியா் தேன்மொழி ஆகியோா் முன்னிலையில்,ஊராட்சி தலைவா்கள் (வெங்கலகுறிச்சி) செந்தில்குமாா் தலைமையில் ஒன்றிய கவுன்சிலா் ராஜசேகா் முன்னிலையில்,ஸ்ரீ கண்ணா மெட்ரிக் பள்ளியில் பள்ளியின் நிறுவுனா் காந்திராஜன் தலைமையில்,பாம்பூா் கவினா இண்டா் நேஷனல்பள்ளி நிறுவுனா் கண்ணதாசன் தலைமையில்,சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.