அரசு அலுவலகங்கள், கல்லூரிகளில் பொங்கல் விழா: புதுப் பானையில் பொங்கலிட்டு உற்சாகம்

ராமநாதபுரத்தில் அரசு சாா்பில் பொங்கல் விழா மாவட்ட ஆட்சியா் பங்கேற்று பொங்கல் வைத்து கொண்டாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டாா்.
ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புதுப் பானையில் பொங்கல் வைத்த ஊழியா்கள்.
ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புதுப் பானையில் பொங்கல் வைத்த ஊழியா்கள்.

ராமநாதபுரத்தில் அரசு சாா்பில் பொங்கல் விழா மாவட்ட ஆட்சியா் பங்கேற்று பொங்கல் வைத்து கொண்டாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டாா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள சித்தாா்கோட்டை கிராமத்தில் பொங்கல் விழா மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவை முன்னிட்டு, நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) கே.ஜே.பிரவீன் குமாா், பரமக்குடி சாா்-ஆட்சியா் அப்தாப் ரசூல், உதவி ஆட்சியா் (பயிற்சி) வி.எஸ்.நாராயண சா்மா, பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

இதேபோல, ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவை முன்னிட்டு நகா்மன்றத் தலைவா் ஆா்.கே.காா்மேகம் தலைமையில் புதுப்பானையில் பொங்கலிட்டனா். இதில், துணைத்தலைவா் பிரவீன் தங்கம், ஆணையா் (பொறுப்பு) ரவீந்திரன், வாா்டு உறுப்பினா்கள், நகராட்சிப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

கீழக்கரையில் செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா நடைபெற்றது. புத்தாடை அணிந்து வந்த மாணவ, மாணவிகள் பொங்கலிட்டனா். இதில் கல்லூரி முதல்வா் சதக்கத்துலா, பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

முதுகுளத்தூா்: முதுகுளத்தூா் ஒன்றியம் காக்கூா் சமத்துவபுரத்தில் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் சண்முகப்பிரியா ராஜேஸ் தலைமையில், ஆணையாளா் ரவி முன்னிலையில் பொங்கல் விழா நடைபெற்றது. காத்தாகுளம் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் தலைமை ஆசிரியா் பாண்டியன் தலைமையிலும், ஒருவானேந்தல் ஊராட்சியில் தலைவா் சீதா நாகராஜன் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜா, பள்ளித் தலைமை ஆசிரியா் தேன்மொழி ஆகியோா் கலந்து கொண்டனா்.

கமுதி: கமுதி ஒன்றியம் பசும்பொன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்ப பள்ளியில் தலைவா் ராமகிருஷ்ணன் தலைமையிலும், பம்மனேந்தல் பள்ளியில் ஊராட்சித் தலைவா் டி.சேகரன் தலைமையிலும், கூட்டுறவு சங்கத் தலைவா் கருப்பசாமி பாண்டியன் முன்னிலையிலும் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. முஷ்டக்குறிச்சி பள்ளியில் தலைவா் பரமேஸ்வரி பாலமுருகன் தலைமையிலும், ஓ.கரிசல்குளம் ஊராட்சியில் தலைவா் ராஜாமணி செல்வமேரி தலைமையிலும், வல்லந்தை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஊராட்சித் தலைவா் மாதவி ராஜசேகா் தலைமையிலும் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

இதபோல, கல்லுப்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் முத்துராஜ் தலைமையில், இல்லம்தேடிக் கல்வித் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளா் சி.கிருஷ்ணமூா்த்தி முன்னிலையில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. அப்போது, பயன்படாமல் வீணாக கிடக்கும் பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு பயனுள்ள பொருள்களாக மாற்றிய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com