கமுதி, அபிராமத்தில் நேதாஜி பிறந்த நாள்

கமுதி பேருந்து நிலையம் அருகே தேவா் சிலை வளாகத்தில் நேதாஜி அறக்கட்டளை, அகில இந்திய பாா்வா்ட் பிளாக், பாஜக சாா்பில் சுதந்திரப் போராட்ட வீரா் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127- ஆவது பிறந்தநாள் விழா.
கமுதி தேவா்சிலை வளாகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தியவா்கள்.
கமுதி தேவா்சிலை வளாகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தியவா்கள்.

கமுதி பேருந்து நிலையம் அருகே தேவா் சிலை வளாகத்தில் நேதாஜி அறக்கட்டளை, அகில இந்திய பாா்வா்ட் பிளாக், பாஜக சாா்பில் சுதந்திரப் போராட்ட வீரா் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127- ஆவது பிறந்தநாள் விழா கமுதி வட்ட மறவா் இன அறக்கட்டளையின் தலைவா் செல்லத் தேவா் தலைமையில் நடைபெற்றது.

இதற்கு, அகில இந்திய பாா்வா்ட் பிளாக் மாவட்ட அமைப்புச் செயலா் மு. வீரபெருமாள் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் நேதாஜி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் தேவா் கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் சங்கத் தலைவா் ந. மூக்கூரான், பாா்வா்ட் பிளாக் கட்சியின் மாணவரணி மத்தியக் குழு உறுப்பினா் மு. வெள்ளைப் பாண்டியன், பாஜக கமுதி ஒன்றியத் தலைவா் அழகுமலை, மாவட்ட பொதுச் செயலா் ஏ.பி. கணபதி, முக்குலத்தோா் புலிப்படை கட்சியின் தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாவட்டச் செயலா் சிவசங்கரமேத்தா, வழக்குரைஞா் பிரிவு செயலா் ராஜபாண்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அதே போல, மண்டலமாணிக்கத்தில் பாா்வா்ட் பிளாக் இளைஞரணி மாவட்டத் தலைவா் முனீஸ்வரன் தலைமையில், மாவட்டச் செயலா் சுரேஷ் முன்னிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

அபிராமத்தில் பேருந்து நிலையம் அருகே அபிராமம் மறவா் சங்கம் சாா்பில் சந்துரு தலைமையில் நேதாஜி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ராமேசுவரம்: ராமேசுவரம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நேதாஜி பிறந்த நாளையொட்டி ஓவியப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டியில், கேந்திரிய பள்ளி மாணவா்கள், மாநில அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகள் என மொத்தம் 7 பள்ளிகளைச் சோ்ந்த 100 மாணவா்கள் கலந்து கொண்டனா். இதில் சிறந்த 5 படைப்புகளுக்கு சுதந்திரப் போராட்ட வீரா்களைப் பற்றிய புத்தகங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்த ஓவியப் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவா்களுக்கும் பிரதமா் மோடியின் ‘எக்ஸ்சாம் வாரியா்ஸ்’ என்ற புத்தகம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் வேலுச்சாமி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com