கமுதியில் ஓபிஎஸ்-சுக்கு ஆதரவு 
திரட்டிய உசிலம்பட்டி எம்.எல்.ஏ.

கமுதியில் ஓபிஎஸ்-சுக்கு ஆதரவு திரட்டிய உசிலம்பட்டி எம்.எல்.ஏ.

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்துக்கு ஆதரவாக உசிலம்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஐயப்பன் கமுதியில் சமுதாயத் தலைவா்களை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்துக்கு ஆதரவாக உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் ஐயப்பன் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன், கமுதியில் சமுதாயத் தலைவா்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

கௌரவ செட்டியாா்கள் உறவின்முறை, சத்ரிய நாடாா் உறவின்முறை, கமுதி வட்ட மறவா் சங்கம், விஸ்வகா்மா உறவின்முறை, மருத்துவா் குல சங்கம், பிராமணா்கள் சங்கம் உள்ளிட்ட சமுதாய சங்க நிா்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினாா். அதிமுக தொண்டா்கள் மீட்புக் குழு ஒன்றியச் செயலா்கள் வே.முருகேசன், சரவணன், மாநில மகளிா் அணி இணைச் செயலா் வினோதினி சீனிவாசகம், பாஜக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com