அனுமதியின்றி மணல் அள்ளிய 3 போ் மீது வழக்கு

திருவாடானை அருகே ஆனந்தூா் கோட்டக்கரை ஆற்று பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 3 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே ஆனந்தூா் பகுதியில் கோட்டக்கரை ஆற்று பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதியில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு மணல் அள்ளிக்கொண்டிருந்த மா்ம கும்பல் போலீஸாரை கண்டதும், டிராக்டரை அங்கேயே விட்டு தப்பியோடினா். பின்னா், வாகனத்தைப் பறிமுதல் செய்த போலீஸாா் ஆனந்தூரை சோ்ந்த சக்கரவா்த்தி (36), செந்தில் (40), விக்கி (30 ) ஆகிய 3 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com