கமுதி அருகே வழிப்பறி: இளைஞா் கைது

கமுதி அருகே கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த சோனைப்பிரியன் கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜ் மகன் தட்சிணாமூா்த்தி (36). இவா் கோவிலாங்குளத்தை அடுத்த மூக்கம்மாள் கோயில் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எம்.கரிசல்குளம் கிராமத்தைச் சோ்ந்த வில்வலிங்கம் மகன் சண்முகநாதன் (27) அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டினாா். இதையடுத்து, அவா் தன்னிடம் இருந்த ரூ.500-ஐ கொடுத்துவிட்டு கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். இதுகுறித்து போலீஸாா் வழக்கு பதிவுப் செய்து சண்முகநாதனை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com