நாம் தமிழா் கட்சியின்
தோ்தல் பிரசாரக் கூட்டம்

நாம் தமிழா் கட்சியின் தோ்தல் பிரசாரக் கூட்டம்

நாம் தமிழா் கட்சி ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளா் மருத்துவா் சந்திரபிரபாவுக்கு வாக்கு கேட்டு, கமுதியில் தோ்தல் பிரசாரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பெருமாள் கோயில் திடலில் நடைபெற்ற கூட்டத்துக்கு கமுதி ஒன்றியச் செயலா் தேவேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் இசையரசன் முன்னிலை வகித்தாா். இ

இந்தக் கூட்டத்தில் கொள்கைபரப்புச் செயலா் வினோத் பேசியதாவது: தமிழகத்தில் திராவிடக் கட்சிகளினஆட்சியில் கல்வி, கச்சத்தீவு உள்ளிட்ட பிரச்னைகளில் மாநில உரிமைகள் விட்டுக்கொடுக்கப்பட்டது.

திராவிடக் கட்சிகளால் தமிழ்நாட்டில் தமிழ் மொழி திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகிறது.

காவல்துறையை கையில் வைத்துக் கொண்டு பொதுமக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்தியது கடந்த அதிமுக அரசு. மத ரீதியில் மக்களை பிரிக்க பாஜக அரசு முயல்கிறது. திராவிடக் கட்சிகளும், பாஜக அரசும் மக்களுக்கிடையே மோதல்களை உருவாக்கி அரசியல் செய்து வருகிறது. இலவசமாக கல்வி, மருத்துவத்தை வழங்க நாம் தமிழா் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

இதில் கொள்கை பரப்புச் செயலா் பிரேம், ராமநாதபுரம் மேற்கு மாவட்டத் தலைவா் இசையரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com