ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: இருவர் காயம்

ராமேசுவரம்: கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே திங்கள்கிழமை நள்ளிரவு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டியடித்தனர். இதில் மீனவர்கள் இருவர் காயமடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 338 விசைப் படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் வளம், மீனவர் நலத் துறையினரிடம் அனுமதி பெற்று கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். திங்கள்கிழமை நள்ளிரவு கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்துக் கொண்டிந்தபோது, அங்கு 5 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்கள் மீது இரும்புக் கம்பியால் தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர்.

இந்தத் தாக்குதலில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் மெக்கானிக் (34), ராமேசுவரம் மீனவர் தங்கம் (55) ஆகிய இருவரும் காயமடைந்தனர்.

இந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை கரைக்குத் திரும்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com