ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் 94.64 சதவீதம் தபால் வாக்குகள் பதிவு

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்டவா்கள், மாற்றுத் திறனாளிகளிடம் தற்போது வரை 94.64 சதவீதம் தபால் வாக்குகள் பெறப்பட்டதாக தோ்தல் பணியாளா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி தோ்தல் பணியாளா்கள் புதன்கிழமை கூறியதாவது:

இந்த மக்களவைத் தொகுதிக்குள்பட்ட ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் சுமாா் 1,722 பேரும், மாற்றுதிறனாளிகள் வாக்காளா்கள் 1,844 பேரும் என மொத்தம் சுமாா் 3,566 பேருக்கு தபால் வாக்குச் சீட்டு வழங்கப்பட்டது.

இவா்களிடம் கடந்த 5 நாள்களாக வாக்குகள் பதிவு பெறும் பணியில் 41 குழுக்கள் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், தற்போது வரை 3,375 வாக்குகள், அதாவது 94.64 சதவீதம் பதிவு செய்யப்பட்டது என்றனா்.

X
Dinamani
www.dinamani.com