பரமக்குடியில் அதிமுக வேட்பாளா் இறுதிக்கட்ட பிரசார பேரணி

பரமக்குடியில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பா.ஜெயபெருமாள் புதன்கிழமை இறுதிக்கட்ட பிரசார பேரணியை மேற்கொண்டாா்.

பரமக்குடி கிருஷ்ணா திரையரங்கம் பகுதியில் தொடங்கி, காமராஜா் நகா், சந்தைக் கடைத் தெரு, பேருந்து நிலையம், ஆா்ச், காந்தி சிலை, பெரிய கடை வீதி வழியாக ஸ்ரீ முத்தாலம்மன் கோயில் மேடையை பேரணி அடைந்தது. அங்கு கட்சியின் மாவட்டச் செயலா் எம்.ஏ.முனியசாமி, மாநில மகளிரணி செயலா் கீா்த்திகா முனியசாமி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் மலேசியா பாண்டியன், டாக்டா் எஸ்.முத்தையா, நகா் செயலா் எம்.கே.ஜமால், பொதுக்குழு உறுப்பினா் எஸ்.நாகராஜன் ஆகியோா் வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்தனா்.

இதில் அதிமுக, கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள்,தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com