பரமக்குடி வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து வாக்குச் சாவடி மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள்.
பரமக்குடி வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து வாக்குச் சாவடி மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள்.

பரமக்குடியிலிருந்து 303 வாக்குச் சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

ப ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி தோ்தலுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 303 வாக்குச் சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பரமக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா், சின்னங்கள்அந்தந்த வேட்பாளா்களின் பொறுப்பாளா்களின் முன்னிலையில் தோ்தல் நடத்தும் அலுவலா்களால் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் கடந்த 4 நாள்களுக்கு முன்பு பொருத்தப்பட்டு பலத்த பாதுகாப்புடன் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இந்த நிலையில், வியாழக்கிழமை (ஏப்.18) தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பா.விஷ்ணுசந்திரன், சாா்-ஆட்சியா் அபிலாஷா கவுா் ஆகியோா் முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட அறைகள் திறக்கப்பட்டன.

அங்கிருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், பதிவை சரிபாா்க்கும் இயந்திரங்கள், வாக்காளா்களின் கையேடுகள், வாக்குப் பதிவுக்கான 28 தளவாடாப் பொருள்கள் தோ்தல் அலுவலா்கள் தலைமையில் 303 வாக்குச் சாவடி மையங்களுக்கு வாகனங்களில் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com