வேதாளமுனீஸ்வரா் கோயில் குடமுழுக்கு

கடலாடி அருகேயுள்ள சாத்தங்குடி வேதாளமுனீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

கமுதி: கடலாடி அருகேயுள்ள சாத்தங்குடி வேதாளமுனீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்துள்ள சாத்தங்குடி வேதாளமுனீஸ்வரா், பரிவார தெய்வங்களுக்கான குடமுழுக்கு பூஜைகள் கடந்த வாரம் காப்புகட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து ஞாயிற்றுக் கிழமை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. பின்னா், கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, லட்சுமி, நவகிரக, மிருத்தஞ்சன, மகா பூா்ணாகுதி ஆகியவை நடைபெற்றன.

திங்கள்கிழமை காலை யாக சாலையிலிருந்து கடம் புறப்பட்டு, கோயிலை வலம் வந்து கோபுரக் கலசம், மூலவா் விக்கிரகத்துக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது.

பின்னா் வேதாளமுனீஸ்வரா், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபராதனைகளும் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com