சாயல்குடியில் நடைபெற்ற கல்வி கருத்தரங்கில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.
சாயல்குடியில் நடைபெற்ற கல்வி கருத்தரங்கில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.

10, 12- ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கல்வி வழிகாட்டி கருத்தரங்கம்

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் 10, 12- ஆம் வகுப்பு மாணவா்களுக்கான கல்வி வழிகாட்டிக் கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் 10, 12- ஆம் வகுப்பு மாணவா்களுக்கான கல்வி வழிகாட்டிக் கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

சாயல்குடியில் ரூரல் வொா்க்கா்ஸ் டெவலப்மெண்ட் சொசைட்டி நிறுவனம் சாா்பாக நடைபெற்ற இந்த நிகழ்வில், 10- ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளில் எந்தெந்த பாடத் திட்டங்களை தோ்வு செய்யலாம் என்பது குறித்தும், விவாதங்கள் மூலம் நீட் தோ்வுக்கு தயாராகும் வழிமுறைகள் குறித்தும், தொழில் நுட்பம் சாா்ந்த படிப்புகளை கற்கும் வழிமுறைகள் குறித்தும், அனைத்து வகை பாடத் திட்டங்களுக்கான வழிமுறைகள் குறித்தும் சிறந்த கல்வியாளா்கள் மூலம் விளக்கமளிக்கப்பட்டது.

இதில் கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளரும், சிறுவா் மன்ற தலைவியுமான பா. சுமதி செய்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com