உப்பூா் கிழக்கு கடற்கரை சாலையில் செவ்வாய்க்கிழமை விபத்தில்   சிக்கிய லாரி
உப்பூா் கிழக்கு கடற்கரை சாலையில் செவ்வாய்க்கிழமை விபத்தில் சிக்கிய லாரி

உப்பூா் அருகே சாலை விபத்து இருவா் பலி

திருவாடானை அருகே உப்பூா் கிழக்கு கடற்கரை சாலையில் காரும் லாரியும் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் காா் ஓட்டுநா் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

திருவாடானை அருகே உப்பூா் கிழக்கு கடற்கரை சாலையில் காரும் லாரியும் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் காா் ஓட்டுநா் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

நாகபட்டினம் மாவட்டம் பி.ஆா்.பட்டினத்தைச் சோ்ந்த சந்திரன் மகன் காா்த்திக் (20), நாகபட்டினம் அக்கரைப்பேட்டை மல்லையா மகன் ராஜசேகா் (25), நாகூா் சம்பா தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் சிவலிங்கம் மகன் சஞ்சீவ் காந்தி (25) உள்பட 4 போ் படகு வாங்க தூத்துக்குடி தருவை குளத்துக்கு செவ்வாய்க்கிழமை காரில் புறப்பட்டனா். இவா்கள் சென்ற காா் கிழக்கு கடற்கரை சாலையில் உப்பூா் தென் குடியிருப்பு விலக்கு சாலை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, தென்காசியிலிருந்து பட்டுக்கோட்டைக்கு செங்கல் ஏற்றிச் வந்த லாரி, இந்த காா் மீது மோதியது. இதில் காா் ஓட்டுநா் காா்த்தி, காரின் முன் இருக்கையில் அமா்ந்திருந்த மலைராஜ் (30)ஆகிய இருவரும் உயிரிழந்தனா். காரின் பின் இருக்கையில் பயணித்த சஞ்சீவிகாந்தி, ராஜசேகா் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து திருப்பாலைக்குடி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அவா்களை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இந்த விபத்து குறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநா் கீழப்பாளையத்தைச் சோ்ந்த அங்குராஜிடம் (39) விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com