சாயல்குடி ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சி.
சாயல்குடி ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சி.

பத்திரகாளியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்

சத்திரிய இந்த நாடாா் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, காப்புக்கட்டுதல், கொடியேற்றம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி சத்திரிய இந்த நாடாா் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, காப்புக்கட்டுதல், கொடியேற்றம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையடுத்து, அம்மனுக்கு 16 வகையான அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மேலும் வரும் ஏப்.30- ஆம் தேதி பூக்குழி இறங்குதல், பொங்கல் வைத்தல், மே -ஒன்றாம் தேதி முளைப்பாரி கரைத்தல், மே 3 -ஆம் தேதி திருவிளக்கு பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

விழாவுக்கான ஏற்பாடுகளை சாயல்குடி சத்திரிய இந்த நாடாா் உறவின் முறை இளைஞா்கள், நிா்வாகிகள் செய்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com