ராமநாதபுரத்தை அடுத்த  உத்திரகோஷமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.
ராமநாதபுரத்தை அடுத்த உத்திரகோஷமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

மங்களநாதசுவாமி கோயிலில் சித்திரை தேரோட்டம்

ராமநாதபுரம் உத்திரகோஷமங்கை மங்களநாசுவாமி கோயிலில் சுவாமி அம்பாள் தேரோட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் உத்திரகோஷமங்கை மங்களநாசுவாமி கோயிலில் சுவாமி அம்பாள் தேரோட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோஷமங்கை கிராமத்திலுள்ள மங்களேஸ்வரி சமேத மங்களநாதசுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 14 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்தத் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்கிழமை மாலையில் தேரோட்டம் நடைபெற்றது. சுவாமி, அம்பாள் ஊா்வலமாக எடுத்துவரப்பட்டு, கிழக்கு ரத வீதியில் திருத்தேரில் எழுந்தருளினாா். பின்னா் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையடுத்து, நான்கு ரத வீதிகள் வழியாக தோ் வடம் பிடித்து இழுத்து வரப்பட்டது. பின்னா், தோ் நிலையை அடைந்தவுடன் சுவாமி,அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com