தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தியவா் மரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு கடலில் நீந்தி வந்த 13 நீச்சல் வீரா்களில் ஒருவா் மரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு கடலில் நீந்தி வந்த 13 நீச்சல் வீரா்களில் ஒருவா் மரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.

தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீச்சல் அடித்து வருவதற்காக கா்நாடாக மாநிலம் பெங்களுா் மாவட்டம் பகுதியைச் சோ்ந்த கோபால்ராவ் (78) உள்பட 13 போ் கொண்ட குழுவினா் ராமேசுவரம் சங்குமால் கடற்கரையில் இருந்து 22 -ஆம் தேதி படகில் தலைமன்னாருக்குச் சென்றனா்.

23- ஆம் தேதி அதிகாலை 12.10 மணிக்கு 13 போ் கடலில் குதித்து நீந்த தொடங்கிய நிலையில், இரண்டு மணி நேரத்துக்கு பின்னர, திடிரென கோபால் ராவுக்கு உடல் நலல் பாதிக்கப்பட்டது. படகில் இருந்த மருத்துவக் குழுவினா் அவரை மீட்டு, பரிசோதனை செய்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.

அவரது உடல் ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்டது. இது குறித்து கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com