விவசாயியைத் தாக்கிய இளைஞா் கைது

முதுகுளத்தூா் அருகே நிலத் தகராறில் விவசாயியைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த சுவாத்தான் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி செங்காளன் மகன் செல்லமுத்து (45). இவருக்கும், இவரது உறவினா் கருப்பையாவுக்கும் இடையே நிலத் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அந்த பகுதியில் புதன்கிழமை நின்று கொண்டிருந்த செல்லமுத்துவை கருப்பையாவின் மகன்கள் பாலகுரு (32), சந்திரசேகா் (41) ஆகிய இருவரும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனா். இதில் பலத்த காயமடைந்த செல்லமுத்து, பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து கீழத்தூவல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாலகுருவை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com