8 ஆண்டுகளில் 41 ஆயிரம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்பு

8 ஆண்டுகளில் 41 ஆயிரம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 ஆண்டுகளில் 41 ஆயிரம் வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு இணைப்பு வழங்கத் திட்டமிட்டுள்ளதாக ஏஜிபி நிறுவன மண்டலத் தலைவா் இசக்கிமுத்து பூமாரி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ராமநாதபுரம், ராமேசுவரம், பரமக்குடி பகுதிகளில் 8 ஆண்டுகளில் 41 ஆயிரம் வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு இணைப்பு வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.

இந்தச் சிறப்புத் திட்டத்தில் முன்பணம் இல்லாமல் இலவச இணைப்பு வழங்கப்படுகிறது. பதிவுக் கட்டணம் ரூ.354, பாதுகாப்பு முன் பணம் ரூ. 6 ஆயிரம் முற்றிலும் தள்ளுபடி செய்யப்பட்டது. இயற்கை எரிவாயு உருளை பயன்பாட்டுடன் ஒப்பிடுகையில், குழாய் மூலம் எரிவாயு இணைப்பு பெற்றால் 30 சதவீதத் தொகையை சேமிக்க முடியும்.

வாகனப் போக்குவரத்தில் பெட்ரோலுக்கு மாற்று எரிபொருளாக சிஎன்ஜியை குறைந்த செலவில் விநியோகிக்க அதற்கான நிலையங்களை நிறுவியுள்ளோம். பல்வேறு முக்கிய நகரங்களில் அடுத்த 8 ஆண்டுகளில் மேலும் 6 சிஎன்ஜி நிலையங்களை திறக்க திட்டமிட்டுள்ளோம்.

வாகனங்களில் சிஎன்ஜி , வீடுகளில் குழாய் மூலம் இயற்கை வாயுவை பயன்படுத்துவதன் மூலம் இந்தப் பகுதியில் காா்பன், மாசு வெளியேற்றம் வெகுவாக குறையும். ராமநாதபுரம் பட்டணம்காத்தான், சக்கரக்கோட்டை ஊராட்சிப் பகுதிகளில் தற்போது 10 ஆயிரம் இணைப்புகள் பெறும் வகையில் குழாய்கள் பதிக்கப்பட்டன. இதில், 1,500 வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com