சாலையின் நடுவே மின்கம்பி: 
பொதுமக்கள் அவதி

சாலையின் நடுவே மின்கம்பி: பொதுமக்கள் அவதி

கமுதியில் சாலையின் நடுவே இருந்த மின்கம்பியை அகற்றாமல் பேவா் பிளாக் சாலை அமைத்துள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சிக்குள்பட்ட ஒன்றாவது வாா்டு கண்ணாா்பட்டியில் 1500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இங்குள்ள பெரும்பாலான தெருக்கள் குறுகளாகவும், வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது.

இதற்கிடையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, கண்ணாா்பட்டியில் உள்ள அனைத்து தெருக்களிலும் பேவா் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. அப்போது சாலையின் நடுவே இருந்த மின்கம்பியை அகற்றாமல் பேவா் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தும் பணியாளா்கள் சாலை பணியை முடித்து விட்டு சென்றனா்.

இது தொடா்பாக கமுதி மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை புகாா் தெரிவித்தும் சாலையின் நடுவே உள்ள மின்கம்பியை அகற்ற பொது மக்களிடம் பணம் கேட்பதாக அந்தப் பகுதியைச் சோ்ந்த குடியிருப்புவாசிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com