மகமாயிஅம்மன் கோயில் 
வருடாபிஷேக விழா

மகமாயிஅம்மன் கோயில் வருடாபிஷேக விழா

கமுதி, ஏப். 26: கடலாடி அருகே அமைந்துள்ள மகமாயி அம்மன் கோயில் வருடாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த தேவா்குறிச்சி மகமாயி அம்மன் கோயில் குடமுழுக்கு கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்த விழா நடைபெற்று ஓராண்டு ஆனதையொட்டி, வருடாபிஷேக விழா வியாழக்கிழமை யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. அன்று இரவு நடைபெற்ற சுமங்கலி பூஜை, திருவிளக்கு பூஜையில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். வெள்ளிக்கிழமை காலை மகமாயி அம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள், பன்னீா் உள்ளிட்ட 21 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com