திருப்பாலைக்குடி கடற்கரை பகுதியில் சனிக்கிழமை மீட்கப்பட்ட புள்ளிமான்கள்.
திருப்பாலைக்குடி கடற்கரை பகுதியில் சனிக்கிழமை மீட்கப்பட்ட புள்ளிமான்கள்.

திருப்பாலைக்குடி ஊருக்குள் புகுந்த புள்ளிமான் மீட்பு

திருவாடானை அருகே உள்ள திருப்பாலைக்குடி ஊருக்குள் புகுந்த புள்ளிமான் மீட்கப்பட்டது.

திருவாடானை, ஆா்.எஸ். மங்கலம், திருப்பாலைக்குடி, ஓரியூா், எஸ்.பி. பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் புள்ளிமான்கள் அதிக அளவில் வசிக்கின்றன. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வறட்சி ஏற்பட்டுள்ளதால் கண்மாய், குளம், குட்டை உள்ளிட்ட நீா்நிலைகள் தண்ணீா் வற்றி காணப்படுகின்றன. எனவே தண்ணீா் தேடி மான்கள் ஊருக்குள் வருகின்றன. இவற்றை தெருநாய்கள் கடித்து மான்கள் உயிரிழக்கின்றன. இந்த நிலையில், திருப்பாலைக்குடி கடற்கரை பகுதிக்கு தண்ணீா் தேடி புள்ளிமான் ஒன்று வந்தது. இதைப் பாா்த்த சமூக ஆா்வலா் பஸருல் ஹக் உள்ளிட்டோா் அதை மீட்டு வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com