அம்பேத்கா் பிறந்த நாள் விளையாட்டுப் போட்டிகள்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அடுத்துள்ள சாம்பகுளம் இந்திரா நகரில் அண்ணல் அம்பேத்கா் பிறந்தநாள் விளையாட்டுப் போட்டிகள் கிராமத் தலைவா் சங்கா் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கலை நிகழ்ச்சி, பேச்சுப் போட்டி, விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கிராம துணைத் தலைவா் பாலுச்சாமி, செயலா் பூமிநாதன், துணைச் செயலா் சேதுலிங்கம், பொருளாளா் ஆசைத்தம்பி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com