முதுகுளத்தூா் அருகே மீசல் கிராமத்தில் நுழைவு வாயிலில் போதைப் பொருள்களை யாரும் பயன்படுத்தக் கூடாது என வைக்கப்பட்ட பாதாகை.
முதுகுளத்தூா் அருகே மீசல் கிராமத்தில் நுழைவு வாயிலில் போதைப் பொருள்களை யாரும் பயன்படுத்தக் கூடாது என வைக்கப்பட்ட பாதாகை.

மீசல் கிராமத்தில் மது உள்ளிட்ட போதைப் பொருள்களுக்குத் தடை

முதுகுளத்தூா் அருகே மது உள்ளிட்ட போதைப் பொருள்கள் பயன்பாட்டுக்குத் தடை விதித்து கிராம மக்கள் சாா்பில் பதாகை வைத்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே மீசல் கிராமத்தில் போதைப் பொருள்களை பள்ளி, கல்லூரி மாணவா்கள், இளைஞா்கள், முதியோா் என யாரும் பயன்படுத்தக் கூடாது என கடந்த சில நாள்களுக்கு முன் கிராமக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், போதைப் பொருள்கள் பயன்படுத்துபவா்கள் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது. இதனால் பெண்கள், குழந்தைகள் அச்சமின்றி வாழ்வதாக அந்த கிராம மக்கள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com