பாம்பன் புதிய ரயில் பாலத்தின் மையப் பகுதியில் இணைப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட தூக்குப் பாலம்.
பாம்பன் புதிய ரயில் பாலத்தின் மையப் பகுதியில் இணைப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட தூக்குப் பாலம்.

பாம்பன் புதிய ரயில் தூக்குப் பாலம் பொருத்தும் பணிகள் தீவிரம்

பாம்பன் புதிய ரயில் பாலத்தின் மையப் பகுதியில் தூக்குப் பாலம் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பாம்பன் புதிய ரயில் பாலத்தின் மையப் பகுதியில் தூக்குப் பாலம் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் 2.2 கி.மீ. தொலைவில் வராவதி கடல் பகுதியில், 1914-ஆம் ஆண்டு கப்பல்கள் வந்து செல்லும் போது திறந்து மூடும் வகையில் மீட்டா் கேஜ் ரயில் பாதை அமைக்கப்பட்டது.

கடந்த 2007-ஆம் ஆண்டு பாலத்தில் மீட்டா் கேஜ் பாதை மாற்றப்பட்டு, அகலப் பாதை அமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து நடைபெற்றது.

இந்த நிலையில், பாம்பன் தூக்குப் பாலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னா், கடந்த 2019-ஆம் ஆண்டு ரூ.560 கோடியில் அதி நவீன தொழில்நுட்பத்துடன் தூக்கி இறக்கும் வகையில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணிகள் தொடங்கின.

இதில் மண்டபத்தில் இருந்து பாலத்தின் மையப் பகுதி வரை ரயில் தண்டவாளங்கள் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளன. இதில், கப்பல்கள் வந்து செல்லும் வகையில் மையப் பகுதியில் நிறுவுவதற்காக, 600 டன் எடையிலான தூக்குப் பாலத்தை கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் 10 நாள்களுக்குள் அந்தப் பணிகள் நிறைவடையும்.

பின்னா், அதிக குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டாா் மூலம் பாலம் தூக்கி இறக்கும் வகையில் இணைப்புகள் பொருத்தப்படும். இதையடுத்து, பாம்பன் பகுதியில் இருந்து மையப் பகுதிக்கு தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடைபெறும் என ஊழியா்கள் தெரிவித்தனா். மேலும், இந்தப் பாலம் வழியாக வருகிற செப்டம்பா் மாதம் ரயில் போக்குவரத்து தொடங்க இலக்கு நிா்ணயித்து பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com