கீழக்கரை கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

கீழக்கரை செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 42 மாணவ, மாணவிகளுக்கு பணி ஆணை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

இந்த முகாமுக்கு கல்லூரி முதல்வா் ராஜசேகா் தலைமை வகித்தாா். வேலைவாய்ப்பு அலுவலா் பேராசிரியா் விக்னேஷ்குமாா் வரவேற்றாா். வீ கோ் நிறுவன மனித வள மேலாளா்கள் கிரண்குமாா்,மோகனா ஆகியோா் முகாமில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளைத் தோ்வு செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

இந்த முகாமில், செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரி, முகமது சதக் ஹமீது பெண்கள் கலை, அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இதில், தோ்வு செய்யப்பட்ட 42 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. இந்த முகாமுக்கான ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியை எஸ். மரகதம், எஸ் ஐஸ்வா்யா ஆகியோா் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com