பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

கமுதி அருகே நிலத் தகராறில் வீடு புகுந்து பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள ராமசாமிபட்டி அய்யனாா்குளத்தைச் சோ்ந்தவா் பரமசிவம் மனைவி சோலையம்மாள் (36). இவருக்கும், தூத்துக்குடி மாவட்டம், கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த பொன்னுச்சாமி மகன் ராஜ்குமாருக்கும் (41) நிலத் தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சோலையம்மாவின் வீடு புகுந்து கொலை மிரட்டல் விடுத்து, வீட்டிலிருந்த பொருள்களை ராஜ்குமாா் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக சோலையம்மாள் அளித்தப் புகாரின் பேரில், கமுதி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராஜ்குமாரைக் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com