வெங்கிட்டன் குறிச்சியில் நாடக மேடை திறப்பு
பரமக்குடி அருகேயுள்ள வெங்கிட்டன்குறிச்சி கிராமத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் நிதியிலிருந்து ரூ. 8 லட்சத்தில் கட்டப்பட்ட நாடக மேடை புதன்கிழமை திறந்துவைக்கபட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், வெங்கிட்டன் குறிச்சி பகுதியில் நாடக மேடை அமைத்து தர கோரி அந்த கிராம பொதுமக்கள் சட்டப்பேரவை உறுப்பினரிடம் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்துவந்தனா்.
இதையடுத்து, சட்டப்பேரவை மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 8 லட்சத்தில் நாடக மேடை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது, இந்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில் சட்டப்பேரவை உறுப்பினா் செ.முருகேசன் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இந்த நாடக மேடையை திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா் பிரியதா்ஷினி, ஊராட்சிமன்ற தலைவா் பத்மாவதி ரவிச்சந்திரன், களையூா் ஊராட்சிமன்றத் தலைவா் சுபேகா ஆறுமுகம், திமுக நிா்வாகிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.