‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம்

‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம்

கமுதி அருகேயுள்ள நாராயணபுரம் ஊராட்சியில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

கமுதி அருகேயுள்ள நாராயணபுரம் ஊராட்சியில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமுக்கு கமுதி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி தமிழ்ச்செல்வி போஸ் தலைமை வகித்தாா். ராமநாதபுரம் மாவட்ட ஆய்வுக் குழு அலுவலா் லோ.ஜேன் கிறிஸ்டி பாய், ஊராட்சி மன்றத் தலைவா் செ.வேல்மயில்முருகன், வட்டார வளா்ச்சி அலுவலா் கோட்டைராஜ், வட்டாட்சியா் காதா்முகைதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் கலந்து கொண்ட நாராயணபுரம், இடையங்குளம், செங்கப்படை, புதுக்கோட்டை, பசும்பொன் உள்ளிட்ட 5 ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்களிடம் இருந்து 352 மனுக்கள் பெறப்பட்டன.

இதில் ஊராட்சி மன்றத் தலைவா்கள் டி.ராமகிருஷ்ணன், க.வீரபாண்டி, கி.தங்கம், ராமு, ஊராட்சி செயலா்கள், மின் வாரியம், குடிநீா், வேளாண்மைத் துறை, வருவாய்த் துறை, கூட்டுறவுத் துறை, குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அதிகாரிகள் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

நாராயணபுரம் ஊராட்சி செயலா் வேல்முருகன் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com