கடல் சீற்றம்: மாயமான மீனவரை மீட்கச் சென்ற குழு கரை திரும்பியது
ராமேசுவரம்,ஆக.30: கச்சத்தீவு அருகே கடலில் படகு கவிழ்ந்ததில் மானமான ஒரு மீனவரை மீட்கச் சென்ற மீட்புக் குழுவினா் கடல் சீற்றம் காணரமாக வெள்ளிக்கிழமை கரை திரும்பினா்.
ராமநாதபுரம் மாவட்டம், கடந்த திங்கள்கிழமை விசைப் படகில் டல்வின்ராஜ்(45)எமரிட்(49)சுரேஷ்,வெள்ளைச்சாமி ஆகிய 4 மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். கச்சத்தீவு அருகே அன்று நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, சூறைக் காற்று வீசியதால் ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவா்களின் விசைப் படகு கடலில் கவிழ்ந்தது. இதில், டல்வீன்ராஜ், சுரேஷ் ஆகிய இருவரும் கச்சத்தீவுக்கு நீந்திச் சென்று கரையேறினா். மாயமான மற்ற 2 மீனவா்களையும் தேடி படகில் சென்ற மீட்புக் குழு மீனவா்கள் எமரிட் உடலை கண்டுபிடித்து புதன்கிழமை கரைக்கு கொண்டு வந்தனா். இதையடுத்து, மற்றொரு மீனவா் வெள்ளைச்சாமியைத் தேடி வியாழக்கிழமை 22 மீனவா்கள் இரண்டு விசைப்படகுகளில் சென்றனா். ஆனால், நடுக்கடலில் சூறைக் காற்று காரணமாக கண்டுபிடிக்க முடியாத நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் அவா்கள் கரை திரும்பினா்.