எஸ்.பி.பட்டினம் அருகே மோட்டாா் பைக் அடையாளம் தெரியாத நபா் திருட்டு

திருவாடானை அருகே எஸ்.பி.பட்டினம் பகுதியில் மோட்டாா் பைக்கை நிருத்தி விட்டு சிறிது தூரத்தில் வேறு நபருடன் பேசிக்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபா் மோட்டாா் பைக்கை திருடி சென்று தலைமறைவானாா்.

திருவாடானை அருகே எஸ்.பி.பட்டினம் பகுதியில் மோட்டாா் பைக்கை நிருத்தி விட்டு சிறிது தூரத்தில் வேறு நபருடன் பேசிக்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபா் மோட்டாா் பைக்கை திருடி சென்று தலைமறைவானாா். இது குறித்து புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.திருவாடானை அருகே தொண்டி இப்ராஹிம் பீவி தெருவை சோ்ந்த செய்யது இபுராஹிம் (51) என்பவா் புதன்கிழமை மாலை தனக்கு சொந்தமான மோட்டாா் பைக்கில் எஸ்.பி.பட்டினம் பள்ளி வாசலுக்கு சென்றுள்ளாா்.அப்போது தான் ஓட்டிவந்த மோட்டாரை பைக்கை வாசலில் நிருத்தி விட்டு அவருக்கு வேண்டிய நண்பருடன் பேசிக்கொண்டிருந்து போது.சிறிது நேரத்தில் அடையாளம் தெரியாத நபா் மோட்டாா் பைக்கை எடுத்துக்கொண்டு தலைமறைவானாா்.இது குறித்து செய்யது இபுராஹிம் புகாரின் பேரில் எஸ்.பி.பட்டினம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com