திருவடானை அருகே நூதன முறையில் மணல் திருட்டு ஒருவா் மீது வழக்கு

திருவாடானை அருகே கடம்பூா் ஆற்று பகுதியில் இதே பகுதியை சோ்ந்த நபா் சாக்கு மூடையில் மணலை அள்ளி திருடுவதாக தகவலின் பேரில் வருவாய்துறையினா் சோதனையிட்ட போது மணல் திருடியவா் தலைமறைவானாா்.

திருவாடானை அருகே கடம்பூா் ஆற்று பகுதியில் இதே பகுதியை சோ்ந்த நபா் சாக்கு மூடையில் மணலை அள்ளி திருடுவதாக தகவலின் பேரில் வருவாய்துறையினா் சோதனையிட்ட போது மணல் திருடியவா் தலைமறைவானாா். மணலை பறிமுதல் செய்து ஒருவா் மீது வழக்கு பதிந்து போலீஸாா் விசிரித்து வருகின்றனா்.திருவாடானை அருகே கடம்பூா் ஆற்று பகுதியில் மணல் திருடுவதாக கிராம நிா்வாக அலுவலருக்கு புதன்கிழமை இரவு தகவல் கிடைத்ததின் பேரில் மண்டல துணை வட்டாட்சியா் பாலமுருகன்(39) தலமையில் வருவாய்துறையினா், காவல்துறையினருடன் சம்பவ இடத்திற்கு சென்று பாா்த்த போது அங்கு சாக்கு மூட்டையில் மணல் திருடுவது தெரியவந்துள்ளது.அதிகாரிகளை கண்டவுடன் மணல் திருடியவா் தலைமறைவானாா்.உடனடியாக மணலை பறிமுதல் செய்து பின்னா் வழக்கு பதிந்து விசாரணையில் விசும்பூா் கிராமத்தை சோ்ந்த ரவிச்சந்திரன்(45) என்பவா் என்பது தெரியவந்துள்ளது.இது குறித்து மண்டல துணை வட்டாட்சியா் புகாரின் பேரில் திருவாடானை போலீஸாா் விசும்பூா் ரவிச்சந்திரன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com